November 2026

episode 9

“திருட்டும் பாலியல் தொழிலும் முன்காலத்தில் இருந்து கொண்டிருந்தது. பழங்காலத்தில்  ஒரு திருமணம்  தாரம் குடும்ப வரை முறைகள் இல்லாதபோது பாலியல் தொழில் வளர்ந்தது. அது நாகரிகம் வளர்ச்சி அடையாத காலம் என்று புறம்தள்ளி விடலாம். ஆனால் தற்போது நாகரிக வளர்ச்சி அடைந்த பின்பும் படுஜோராக நடைபெறுகிறது பாலியல் தொழில். ஆண்டுதோறும் இந்தியாவில் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை பாலியல் தொழிலில் புழங்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கோடிகள் புரளும் இந்தத் தொழிலில் கொடுமைகள் ஏராளம். அதிர்ச்சிகளும் தாராளம். நூறு நாடுகளில் […]

episode 9 Read More »

உருத்திரா ❤️ 40(final)

எபிலாக்  மூன்று வருடங்கள் கழித்து… ஏர்போர்ட் வருகைப் பகுதியில் ருத்ராவின் குடும்பம் மொத்தமாக கூடியிருந்தது. அவர்கள் வீட்டு குட்டி மருமகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறாள் அதுமட்டுமா பத்ரனின் வாரிசை தன் வயிற்றில் சுமந்துகொண்டு வருகிறாள் திகள்விழி! படிப்பை முடிக்கும் வரை குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தவனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்தும் தோற்றுப்போன திகள், கடைசியில் அவன் பிடிவாதத்தைக் கண்டு கடுப்பாகி சுற்றிக்கொண்டிருந்தாள். அமெரிக்காவில் ஒரு வருட மருத்துவப்

உருத்திரா ❤️ 40(final) Read More »

உருத்திரா ❤️ 39

  நிலாவுக்கு ஏழாவது மாதத்தில் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. திகள்விழி நானே இந்தியாவிற்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்ததால், பத்ரன் வளைகாப்பு மற்றும் ரிசப்ஷன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். நிலாவின் வளைகாப்பு முடிந்த இரண்டு நாட்கள் கழித்து திகளுக்கும் பத்ரனுக்கும் ரிசப்ஷன் என்பதால், இரு குடும்பத்தினரும் ஓய்வில்லாமல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் வளைகாப்பு என்ற நிலையில், இரவு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த மனைவிக்காக பொக்கேவுடன் காத்திருந்தான் பத்ரன். விமானம் தரையிறங்கியதாக அறிவிப்பு வந்ததும் அவனுடைய பார்வை

உருத்திரா ❤️ 39 Read More »

காதல் 74

மாதங்கள் அழகாக உருண்டோடிருந்த நிலையில் ஆதர்ஷ், நடாஷாவின் திருமணம் அனைவரின் ஆசியோடு சுகமாக முடிந்திருக்க, ஆஷிக், ஜியா வாழ்க்கையிலும் அனைத்தும் சுமூகமாக இருந்தது.  ஆஷிக்கின் காதல் குடும்பத்தினரின் அரவணைப்பு, மருத்துவரின் ஆலோசனை இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து கிடைக்க, அவளது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தது. அடிக்கடி பயப்படுவது, நடக்காததை நடந்துவிடுமோ என்று எண்ணி கற்பனை செய்வது, இப்படி எல்லாப் பிரச்சனைகளும் படிப்படியாகக் குறைந்திருக்க, ஜியா பழையபடி சகஜ நிலைக்கு வந்திருந்தாள்.  ஆஷிக்கின் தூண்டுதலால் அவனது

காதல் 74 Read More »

காதல் 73

தன்னைக் கண்டதும் ஆஷிக் நிச்சயமாக, ‘ஏன் இன்னும் தூங்கலைன்னு’ ஏதாவது கேப்பான் என்று எண்ணி அவளாய் காத்திருந்தாள்.  அவளை நெருங்கி வந்த ஆஷிக், “ஜியா!” என்று அழைக்க, “என்ன?” என்றவளிடம்,  “தூக்கம் வருது, கொஞ்சம் லைட் ஆஃப் பண்ணிருடா.” என்று கூறி போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்க ஜியா, ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறே உறங்கினாள், இல்லை உறங்க முயற்சி செய்தாள். ‘நாம் ஆஷிக்குக்கு சரி தானா? அவன் தன் மீது வைத்திருப்பது காதலா? பரிதாபமா? என்கின்ற கேள்விகள்,

காதல் 73 Read More »

காதல் 72

இத்தனை நாட்களாக விடாமல் வீசிய புயல் ஓய்ந்ததில் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். ஆஷிக்கும் ஆதர்ஷும் எதையோ பற்றிப் பேசி சிரித்துக் கொண்டிருக்க,  “என்னடா சிரிப்புச் சத்தம் எல்லாம் பயங்கரமா இருக்கு, என்ன விஷயம்?” என்றவாறு வந்த ரோஹித்திடம், ஆதர்ஷ் புன்னகையோடு, “இல்லை, எனக்குக் குழந்தை பிறந்தா ஆஷிக்கும் நீயும் என்ன முறை வருவீங்கன்னு கேட்டேன். இவன் சொன்னான் நீ பெரியப்பா, அவன் சித்தப்பான்னு. அதான் சிரிப்பா இருந்துச்சு…” என்று சொல்ல, கடுப்பான ரோஹித், “ஆமாடா உன்

காதல் 72 Read More »

காதல் 71

மறுநாள் காலையில் ஜீவா, சுஜித்தின் கொடூரமான மரணச் செய்தி காட்டுத் தீ போல ஊரெங்கும் பரவியது.  ப்ரெஸ் ரிப்போர்ட்டர்ஸ்களைத் தொடர்ந்து பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பிருந்த நிலையில், ஜீவா மற்றும் வருணின் உறவுக்காரர்கள் அவர்கள் இருவரது மரணத்திலும் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று தெரிவிக்க, போலீஸ் தரப்பு விசாரணையிலும் சந்தேகப்படும் படி எந்தத் தடயமும் கிடைக்காததால்,  ஹைவேயில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் அதே வழிப்பறி கொள்ளைக்காரர்கள் தான், பணத்திற்காக இவர்களது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்கள். 

காதல் 71 Read More »

காதல் 70

நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்க ஒருநாள் காலையில் டெல்லியில் ஆங்காங்கே, சமீரின் ஆதரவாளர்கள் சமீருக்காகக் கொந்தளிப்பில் இருந்தனர். அதில் இப்பொழுது புதிதாக மனித நேய உறுப்பினரும் சேர்ந்து, அமைதி ஊர்வலம் நடத்திக்கொண்டிருக்க, அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் நிருபரிடம், “சமீருக்கு நியாயம் கிடைக்கணும். அவர் அந்தப் பொண்ணை உண்மையா காதலிச்சுருக்காரு. தப்பு அந்தப் பொண்ணு மேல, ஆஷிக் சமீருக்கு சப்போர்ட் பண்றத விட்டுட்டு, அவரோடு மனைவிக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு. இப்போ கொலை முயற்சி வர

காதல் 70 Read More »

காதல் 69

விஷயம் அறிந்த அஸாத் அலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொண்டு, “என்னய்யா எல்லாரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்கிட்ட வாங்குனதெல்லாம் மறந்துபோச்சா? எந்த வழி மறந்தாலும் வந்த வழி மறக்க கூடாது. நான் நினைச்சேன், ஒரே நாள்… உங்கள ரோட்டுக்குக் கொண்டு வர ரொம்ப நேரம் ஆகாது.  அந்த இன்ஸ்பெக்டர் சொல்ல சொல்ல கேக்காம, என் பையனை அரெஸ்ட் பண்ணியே தீருவேன்னு ஒத்தக்கால்ல நின்னு அரெஸ்ட் பண்ணிட்டு போயிருக்கான்.” மிரட்டும் தோரணையில் அதிகாரத்தோடு அவர் பேச, தடுமாற்றத்தோடு எதிர்முனையில்

காதல் 69 Read More »

காதல் 68

இன்று சமீர் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகள், “உன் ஆசை வொய்ஃப்பை என்கிட்ட விட்டுட்டு போ நான் பார்த்துக்கறேன்.” தன்னை மூர்க்கனாக்கிய அதே வார்த்தைகள், ஜியாவுக்கு அவன் இழைத்த கொடுமைகள், ஜியாவின் கதறல்கள் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆஷிக்கை மீண்டும் மிருகம் ஆக்க, ஆக்சிலேட்டரை ஆக்ரோஷமாக மிதித்தவாறு புயலாய் பறந்தான்.  ‘இன்னைக்குத் தான் உனக்குக் கடைசி நாள் சமீர். உன்னை ஒரு தடவ இல்லை, நூறு தடவ என் கையாலே அடிச்சே சாகடிக்கப் போறேன்.’ என்று முழங்கியவாறே,

காதல் 68 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!