காதல் 47
சூரியன் கண்விழிக்க பொழுது எப்படித்தான் உருண்டோடியதோ? மயக்கும் மாலை பகலை மையம் கொள்ள, அனைவரும் ஆஷிக், ஜியாவின் ரிசப்ஷன் ஏற்பாட்டில் கவனமாய் இருந்தனர். எப்பொழுதும் இரவு நேரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த நட்சத்திர விடுதி, இன்று மகுடத்திற்கு மகுடம் சேர்ப்பது போலப் பல விலையுயர்ந்த அலங்கார விளக்குகளால், மிகவும் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது. அஸாத் வேலையாட்களைத் தன் பாணியில் அதட்டிக்கொண்டிருக்க, அவரது பணியாட்களும் அவருக்கு ஆமாம் போட்டவாறு, அவர் சொன்ன திருத்தங்களைச் சரி செய்து கொண்டிருந்தனர். அஸாத் தன் […]
