November 2026

காதல் 21

மறுநாள் காலையில் ஹாஸ்பிடலில் சூரியக் கதிர்களின் தீண்டலில் ஆஷிக் கண்விழிக்க, அவன் எதிரே இருந்த ஆதர்ஷ் முகத்தில் புன்னகை தளும்ப, “குட் மார்னிங்டா.” என்று கூற, “கு… ட்… மார்… னிங்.” என்று இழுத்தவாறு சோம்பலை முறித்து நிமிர்ந்து உட்கார்ந்தான் ஆஷிக்.  “சீக்கிரமா கண்முழிச்சுட்ட, பரவாயில்லையே?” என்று தன் கை கடிகாரத்தைப் பார்த்த ஆதர்ஷிடம், ஆஷிக் குறும்பு பார்வை தொனிக்க, “என்னடா பண்றது, சூரியன் டார்லிங் என்னைக் கி… ஸ் பண்ணிடுச்சு.” என்று இதழோரம் புன்னகைத்தவனைக் கண்டு, […]

காதல் 21 Read More »

காதல் 20

பலமணிநேர ட்ரீட்மெண்ட்டிற்குப் பிறகு மயக்கத்தில் இருந்து ஆஷிக் கண்விழிக்க, அவன் அருகில் வந்த ஆதர்ஷ், என்னடா ரோமியோ, ஒரு செகண்ட்ல என் கண்ணையே வேர்க்க வச்சுட்டியே?” என்று விளையாட்டாக அவனது தோளில் தட்ட,  “ஆ…” என்று புன்னகைத்தவாறே ஆஷிக் எழும்பி உட்கார, “என்னடா வலிக்குதா?” “லைட்டா…” என்றவன் அமைதியாய் இருக்க, “என்ன எதுவும் பேசமாட்டிக்கிற?” “என்ன பேச சொல்ற? இது ஏதோ ஸ்வாமிஜியோட ஆஷ்ரமத்துக்கு வந்த மாதிரி ரொம்ப அமைதியா இருக்கு, ஒரு நர்ஸ் கூட இல்லை

காதல் 20 Read More »

காதல் 19

ஏர்போர்ட்டில் மேனேஜர் சந்தீப் ஆதர்ஷிடம், “ஆஷிக் ஏன் இன்னும் ரிப்போர்ட் பண்ணல? யூ கைஸ் நீட் டு போர்ட் தி ஃப்ளைட்.” “சார் ஈவன் ஐயம் திங்கிங் அபவுட் இட், சார் ஆஷிக் இஸ் தேர்.” என்றவாறு ஆதர்ஷ், ஆஷிக்கின் அருகில் சென்று, “ஏன்டா லேட்?” “ஒன்னும் இல்லை, கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான்…” “என்னாச்சு? ஆர் யு ஓகே?” “ஓகேடா, நீ டென்சன் ஆகாத ஐயம் ஃபைன்.” “யா கம் வீ ஆர் கெட்டிங் லேட்.”

காதல் 19 Read More »

காதல் 18

கோபத்தின் உச்சியில் இருந்த ஜீவாவை, ‘உன்னால இதைத் தவிர வேற என்ன பண்ண முடியும்’ என்று ஜியா கூறிய வார்த்தைகள், ஊசி போலத் துளைக்க க்ரோதத்தில் தன்னால் முடிந்த வரை காரின் ஹாரனை வேகமாக அழுத்தியவன், தன் அருகில் இருந்த மதுபானத்தை வெளியில் தூக்கி எறிய, காரின் பாதித் திறந்திருந்த கண்ணாடியில் பட்டு, எறிந்த பாட்டிலின் கண்ணாடி துண்டுகள் அவனது தோளையும் இமையையும் பதம் பார்க்க அது, ‘எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல’ அவனது க்ரோதத்தை இன்னும்

காதல் 18 Read More »

காதல் 17

தன்னவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவாறே தன் விரலை அவளது கழுத்தில் விளையாட விட, கூச்சத்தில் லேசாக அவனைத் தள்ளிவிட்டவள் அங்கிருந்து செல்ல போக, ஜியாவின் கரம் பற்றி இழுத்தவன் அவளைத் தன் பக்கம் இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவளும் விருப்பமாய் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.  தன் கழுத்தின் வளைவில் தன் முகத்தைப் புதைத்தவனின் மூச்சு காற்று வெப்பத்தைச் சேர்க்க, இதற்கு மேல் முடியாதவளாய் தன்னவனது முதுகை இறுக்கப் பற்றிக்கொண்டாள்.  அவள் இறுக்கி அணைத்ததில்

காதல் 17 Read More »

மலர் -சுபம்

சுபம்  நல்லதோ நம்ம வீட்டுல இருக்கறவங்க பேசற வார்த்தைகள் வேண்ணா  சுருக்குன்னு இருக்கலாம். ஆனா என்னிக்குமே நம்மளோட சொந்த வீடுதான் நமக்கு பாதுகாப்பு. நீ எப்ப வேண்ணா இங்க வரலாம். நானே இல்லைனாலும் அமிர்தா , தாத்தா பாட்டி , அப்புறம் என்னோட குழந்தைங்க எல்லாரும் இருப்பாங்க. இதுவும் உன்னோட குடும்பம்தான். உனக்கு தேவையான நிம்மதி அன்பு, பாதுகாப்பு,தோழமை எல்லாமே இங்க கிடைக்கும்.  நீ எப்ப வேண்ணாலும் இங்க வரலாம்.”   அருகில் சென்று அவள் உள்ளங்கையை அழுத்தினான். “ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த் . எனக்கு

மலர் -சுபம் Read More »

மலர் 38

மலர் 38   “போதும் விடுடி! அவளை மொக்கை போட்டுக்கிட்டு. அங்க என் பேரன் தவிச்சுக்கிட்டு இருப்பான். ” தாத்தாவின் செல்ல கோபத்துக்கு பாட்டி ஸ்ட்ராங்கா முறைத்தார். “உங்க பேரன் வேற எப்படி இருப்பான்? ”  சிறியவர்கள் காதல் ஒரு மாதிரி என்றால் வயதான காலத்தில் வேறு மாதிரி. அவர்களைப் போல செல்ல சண்டை போட்டுக் கொள்ளும் வயதான வரு, ஆனந்தை கற்பனை செய்துக் கொண்டே மாடி ஏறி வந்தாள். மாடி ஏறி வந்தவளுக்கு பெரியவர்கள் சொன்னது பல விஷயங்கள் புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனந்த்  அங்கே அலுவலகத்திற்கு பேசி கொண்டிருந்தான். பாட்டி  சொன்னது போலவே தலை வாரி பூ வைத்துக் கொண்டவளை இன்னமும் பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? எப்போதும் பேச ஆரம்பித்தால்  நிறுத்தாதவன், மூளை  இப்போது வேலை நிறுத்தம் செய்து விட்டது. “நான் அப்புறம் பேசறன்.” அவன் போனை வைத்ததும், “ஆமா! புதுசா

மலர் 38 Read More »

மலர்-37

    மலர் -37 “ரொம்ப டயர்டா இருப்ப. வா தூங்கலாம்”   இவளுக்கு ஏதோ ஒரு ஏமாற்றம் . கோபமும் இயலாமையும் அழுகையும் முட்டிக் கொண்டு வந்தது. அதை அவனிடம் காண்பிக்கவும் முடியாது. இன்னமும் அவளுக்கு அவன் மீது பயம்தான்.   சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருந்தாள். சற்று நேரத்தில் அவனை ஒட்டி  படுத்துக் கொண்டாள் . அவனின்  மூச்சின் சத்தம் கேட்டது. திரும்பி அவன் முகம் பார்த்தாள் . கண் மூடி இருந்தான்.  தூங்கறாரா ? மெதுவாக அவன்

மலர்-37 Read More »

மலர்-36

“இங்க பாருப்பா! உங்கம்மா மாதிரி ஒரு உத்தமிய எங்கையும் பாக்க முடியாது. அவ பண்ண ஒரே தப்பு அழகா புறந்ததுதான். அவளுக்கு நினைவு இருந்த வரைக்கும் உன்னையும் உங்கப்பனையும்தான் நினைச்சுகிட்டு இருந்தா. ஏதோ கடவுளா பார்த்து உன்கிட்ட இவளையும் இவ புள்ளயையும் அனுப்பி இருக்கான். இனிமே இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு”    இந்த உலகத்தில் தனக்கே பெரிய துன்பம், கடவுள் தன்னை  மட்டும் இப்படி செய்து விட்டார் என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

மலர்-36 Read More »

அர்ப்பணம் 14

அவனை அப்படி அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்து விட்டக் குரூரத் திருப்தியிலும், நிம்மதியிலும் ராஜன் மற்றும் அவனது தாய், தந்தையின் முகங்களிலும் புன்னகைப் பளிச்சிட்டது எனலாம்!  ஆனால் அங்கிருந்த மற்றவர்களோ தங்கப்புஷ்பத்தின் குணத்தையே சந்தேகிக்கும் வகையில் அவளைப் பார்க்கத் தொடங்கினார்கள்.  அதைத் தானும் கண்டு கொண்டுத் தனது உடலை இன்னும் குறுக்கிக் கொண்டு,  “அப்பா! அம்மா! நான் உள்ளே போகவா?”எனத் தன்னுடைய பெற்றோரிடம் கேட்டிருந்தாள் தங்கப்புஷ்பம்.  “அட! நீ அதுக்குள்ளே அப்படி உள்ளே போயிட முடியுமா புஷ்பம்? இன்னும்

அர்ப்பணம் 14 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!